
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதி வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து நீர் பாய்கின்றது. இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது.
எனவே, முல்லைத்தீவிற்கு பயணம் செய்வோர் புதுக்குடியிருப்பு கேப்பாபிலவு வழியான மாற்று வழியினை பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவுறுத்தல் வழங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

