
தனது அரசாங்கம் மீது தான் கோரிய நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரெஞ்சுப் பிரதமர் பொஸ்வா பைரூ தோல்வியடைந்துள்ளார்.
பிரதமர் பைரூவை பதவியிலிருந்து வெளியேற்றவும், அவரது சிறுபான்மை அரசாங்கத்தை கவிழ்க்கவும் பிரெஞ்சு தேசிய சட்டசபையானது 364 -194 என்ற வகையில் வாக்களித்திருந்தது. இன்னொரு 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில் நாளை காலை தனது இராஜினாமாவை பிரதமர் பைரூ, ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனிடம் கையளிக்கவுள்ளார்.

