இந்திய பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் சி. ஜோசப் விஜய் சந்தித்துள்ளார்.
மூன்று நாள்கள் உத்தியோகபூர்வ பயணமாக டில்லி சென்றுள்ள, முதல்வர் ஜோசப் விஜய், நேற்று நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.
நீதி ஆயோக் கூட்டத்தில் தமிழக நிதி மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதித் தேவைகள் குறித்து விரிவாக முதல்வர் பேசினார்.
நீதி ஆயோக்கின் 11 ஆவது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நிறைவடைந்த பின்னர், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று புதுடில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில், முதல்வர் ஜோசப் விஜய் சந்தித்துப் பேசியுள்ளார். (a)


