புத்தளம் – கருவலகஸ்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டாரவை பிணையில் விடுவிக்குமாறு புத்தளம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபரை 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
ஆனால், அவரது சாரதி அனுமதிப் பத்திரத்தை தற்காலிகமாக ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யசோதா ரங்கே பண்டார கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. R

