இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் (Examinations Department) நடத்தப்படும் அனைத்துத் பரீட்சைகளுக்கும் விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தைக் குறிப்பிடுவது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர (O/L) பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்கள் அனைவரும், தங்களின் தேசிய அடையாள அட்டைகளை முன்கூட்டியே பெற்றுத் தயாராக வைத்திருக்க அறிவுறுத்துமாறு அனைத்துப் பாடசாலை அதிபர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதற்கு முன்னதாகவே, பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் அனைவரும் தங்களது தேசிய அடையாள அட்டைகளைத் தயாராக வைத்திருப்பதை உறுதி செய்வது அவர்களின் பொறுப்பாகும் என பரீட்சை திணைக்களம் வலியுறுத்தி குறிப்பிட்டுள்ளது.
