இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வௌ்ளிக்கிழமை (14) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சூர்யாவின் 46-வது திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை நாக வம்சி தயாரிக்க, மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களும் டீசரும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், சூர்யா தன்னைவிட 20 வயது குறைந்த பெண்ணைக் காதலிக்கும் வித்தியாசமான கதைக்களமாக இது உருவாகியுள்ளது.
இந்நிலையில், படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று இயக்குநர் வெங்கி அட்லூரி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மொட்டை அடித்துச் சாமி தரிசனம் செய்துள்ளார். விநியோகஸ்தர்களுக்கான சிறப்புக் காட்சியைப் பார்த்த பலரும் இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் எனப் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.


