நெல் கொள்வனவுக்கு வழங்கப்படும் விலைகளை அரசாங்கம் நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் புதன்கிழமை (05) அறிவித்துள்ளது.
அதற்கமைய, நாடு நெல் ஒரு கிலோ கிராம் நாடு நெல் 120 ரூபாவுக்கும், சம்பா நெல் கிலோ கிராம் 125 ரூபாவுக்கும், கீரி சம்பா நெல் கிலோ கிராம் 132 ரூபாவுக்கும் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் என விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த மற்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்னே தெரிவித்துள்ளனர்.
தற்போது இடம்பெற்றுவரும் செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர். (S.R)

