
ரஞ்சித் ராஜபக்ஷ
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக நுவரெலியா மாவட்டத்தில் 18 அரசியல் கட்சிகள் மற்றும் 8 சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக நுவரெலியா மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி சபைகளுக்கு 110 வேட்புமனுக்கள் பெறப்பட்டதாகவும், அவற்றில் 18 அரசியல் கட்சிகள் மற்றும் 8 சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட தாகவும், 97 அரசியல் கட்சிகள் மற்றும் 13 சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட தாகவும் அவர் தெரிவித்தார்.
வேட்பு மனுக்களை ஏற்றுக் கொண்ட பின்னர் வியாழக்கிழமை (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே திருமதி துஷாரி தென்னகோன் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் கொத்மலை மற்றும் மஸ்கெலியா மாகாண சபைகளுக்கு சுயாதீனமாக போட்டியிடுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

