
நுவரெலியா காவல் நிலையப் பிரிவிற்குட்பட்ட லவர்சிலிப் பிரதேசத்தில் பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த பெண் ஒருவர், நுவரெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 43 வயதுடைய விநாயகம்புரம், நுவரெலியா பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே சனிக்கிழமை (29) அன்று ஏற்பட்ட குடும்பத் தகராறு முற்றியதன் காரணமாக, கணவரால் பொல்லால் தாக்கி இக்கொலை செய்யப்பட்டுள்ளமை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, நுவரெலியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

