நுவரெலியா,கண்டி வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் புதன்கிழமை (05) வழமைபோல் இயங்கும் என மத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.
எனினும், புதன்கிழமை (04) இரவு காலநிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு அவசர நிலை உருவானால் மட்டுமே, அதற்கேற்ப புதிய தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, ஏதேனும் அவசரக் காலநிலை நிலவினால், பாடசாலையைத் திறந்து நடத்துவதா அல்லது பகுதி அளவில் திறப்பதா என்பது தொடர்பான இறுதித் தீர்மானத்தை, சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்கள் நிலமையைக் கருத்தில்கொண்டு எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அனைத்துப் பாடசாலைகளும் வழமைபோல் கல்வி நடவடிக்கைகளை புதன்கிழமை (05) முன்னெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.


