
நீரில் மூழ்கிய விபத்தில் இருந்து வெளிநாட்டு தம்பதியினரை அஹுங்கல்ல பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் மீட்டுள்ளனர்.
அஹுங்கல்ல கடற்கரையில் சனிக்கிழமை (25) நீச்சலடிக்கச் சென்ற ஒரு வெளிநாட்டுத் தம்பதியினர், ஒரு பெரிய அலையில் சிக்கிக் கொண்டனர். அவர்கள், பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினரரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
51 மற்றும் 46 வயதுடைய ரஷ்ய தம்பதியினரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர்.

