சுனாமி மற்றும் பிற பேரிடர்களால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், நாளை (26) காலை 9:25 மணி முதல் காலை 9:27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், 2025ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, காலியில் உள்ள பெரலிய சுனாமி நினைவுச் சின்னத்தில் நாளை காலை 8.30 மணி முதல் காலை 11.00 மணி வரை முக்கிய நிகழ்வு நடைபெறும் என்று பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அளவில் மதங்களுக்கு இடையேயான நிகழ்ச்சிகளும் இதன்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி பேரலையால் இலங்கை உட்பட முழு உலகமும் பாதிக்கப்பட்டிருந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. R

