‘திட்வா’ (Ditwah) சூறாவளியால் சேதமடைந்திருந்த மலையக ரயில் பாதையின் நானுஓயா – அம்பேவெலை இடையிலான திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, நானுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவைகள் வரும் சனிக்கிழமை (20) முதல் விசேட கால அட்டவணையின்கீழ் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. ரயில் சேவைகளை சீராக முன்னெடுக்கும் நோக்கில், திருத்தப்பட்ட கால அட்டவணையின்படி ரயில்களை இயக்க ரயில்வே திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.
அதேவேளையில், மலையக ரயில் பாதையின் ரம்புக்கனை – நானுஓயா இடையிலான சில பகுதிகளில் சேதமடைந்த ரயில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அப்பகுதிகளை விரைவாக சீரமைக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.


