• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || தொடர்ந்து ஓடிய பிரின்ஸ்லி

GenevaTimes by GenevaTimes
March 22, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || தொடர்ந்து ஓடிய பிரின்ஸ்லி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே, மனித வலுவினால் இயங்கும் உடற்பயிற்சி இயந்திரத்தில் தொடர்ச்சியாக ஓடி மூன்று கின்னஸ் உலக சாதனைகளை படைக்கும் முயற்சியை கடந்த வெள்ளிக்கிழமை (20) ஆரம்பித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை (22) வரை 48 மணிநேரம் தொடர்ச்சியாக ஓடி, மூன்று புதிய கின்னஸ் உலக சாதனைகளை படைக்கத் தகுதி பெற்றுள்ளார்.


பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ், இதற்கான வசதிகளை இலங்கை கடற்படை வழங்கியிருந்தது.


முதலாவது சாதனை: அவர் 12 மணித்தியாலங்களில் 100.36 கிலோமீட்டர் தூரத்தை ஓடி முடித்துள்ளார். இதன் மூலம் 12 மணிநேரத்தில் 94.30 கிலோமீட்டர் ஓடிய தனது முந்தைய கின்னஸ் உலக சாதனையை அவரே முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.


இரண்டாவது சாதனை: தனது இரண்டாவது கின்னஸ் உலக சாதனை முயற்சியில், 24 மணிநேரத்தில் 190.55 கிலோமீட்டர் தூரம் ஓடினார். இதன் மூலம் 24 மணிநேரத்தில் 188.13 கிலோமீட்டர் என்ற முந்தைய கின்னஸ் உலக சாதனையை அவர் முறியடித்துள்ளார்.


மூன்றாவது சாதனை: தாய்நாட்டிற்கும் கடற்படைக்கும் சர்வதேச ரீதியில் பெருமை சேர்க்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமை(22) காலை  10:00 மணிக்கு, அவர் 48 மணிநேரத்தில் 316.7 கிலோமீட்டர் தூரத்தை ஓடி முடித்து புதிய கின்னஸ் உலக சாதனைக்கு தகுதி பெற்றுள்ளார்.


இவற்றுடன் மேலதிகமாக Manual Treadmill இல் 11 மணி 57 நிமிடம் 18 வினாடிகளில் அதிவேக 100 கி.மீ. ஓட்டம். 20 மணி 07 நிமிடம் 42 வினாடிகளில் அதிவேக 100 மைல் ஓட்டம். 44 மணி 40 நிமிடம் 24 வினாடிகளில் அதிவேக 300 கி.மீ. ஓட்டம் ஆகிய மூன்று சாதனைகளும் படைத்துள்ளார்.


இச்சாதனைகளும் கின்னஸ் உலக சாதனைகளாக அங்கீகரிக்கப்பட முன்மொழியப்பட்டுள்ளன.


இலங்கை கடற்படையின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரியான ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே படைத்துள்ள இந்த சாதனை, இலங்கை இளைஞர்களுக்கு மட்டுமல்லாது உலகிற்கே ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது.


  எம்.எச்.எம். சியாஜ்









Read More

Previous Post

சாலையில் பட்டாசு வெடித்ததால் பொருட்கள் சேதம்: இளைஞர் கைது | Makkal Osai

Next Post

மத்திய கிழக்கு நெருக்கடி நீடித்தால் மாற்று எரிசக்தி ஆதாரங்கள் குறித்து அரசு பரிசீலனை – Malaysiakini

Next Post

மத்திய கிழக்கு நெருக்கடி நீடித்தால் மாற்று எரிசக்தி ஆதாரங்கள் குறித்து அரசு பரிசீலனை – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin