
முன்னாள் பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோனின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அவரை, ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் இன்று (21) உத்தரவிட்டார்.
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (19) சரணடைந்ததை அடுத்து, , தேசபந்து தென்னக்கோன் இன்று (20) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

