முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (19) அன்று உத்தரவிட்டுள்ளது.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள துமிந்த திசாநாயக்க வியாழக்கிழமை(19) அன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

