
மீகொட பகுதியில் செவ்வாய்க்கிழமை (12) மதியம் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் 47 வயதான சாந்த முதுங்கொடுவ மரணமடைந்தார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் போது உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொதுஜன ஐக்கிய பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினரான இவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து ஹோமாகம பிரதேச சபை உறுப்பினராக இருந்தார், கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் சர்வஜன பலய கட்சியில் போட்டியிட்டார், ஆனால் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
முன்னாள் உறுப்பினர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, வெள்ளை நிற காரில் வந்த ஒரு குழு துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றது.
மீகொட பகுதியில் ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரை சுட்டுக் கொன்ற துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தலவத்துகொட பகுதியில் தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

