
எஸ்.கீதபொன்கலன்
திருகோணமலை கடற்கரையில் புத்தர் சிலையை வைத்த விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 4 பெளத்த பிக்குகள் உற்பட 10 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 9 ந் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நீதிவான் நீதிமன்ற பிரதான நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுடீன் இந்த உத்தரவை திங்கட்கிழமை (02) வழங்கினார்.
இவ்விவகாரம் தொடர்பில் மேல்முறையீட்டு நீதிமன்றில் நாளை(3) மீண்டும் வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது.இதில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிக்குகள் உற்பட எதிராளிகளுக்கு பிணைக்கான அனுமதி வழங்கப்பட்டால் அதனை அடிப்படையாக கொண்டு திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் பிணைக்கான மனுவை முன் வைக்க தாம் எண்ணியுள்ளதாக பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி மஹேஸ் கொட்டுவெல்ல நீதிமன்றத்திற்கு வெளியில் வைத்து ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்தார்.

