வயோதிபர் ஒருவர் தவறான முடிவெடுத்த சம்பவம் பொலிகண்டி கிழக்கில் நேற்று (15) இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ஆறுமுகம் அரிபரநிதி (வயது-73) என்ற வயோதிபரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை வல்வெட்டித்துறை பொலிஸார் நெறிப்படுத்தினர். (a)

