யாழ்ப்பாணம், வடமராட்சி, கிழக்கு செம்பியன்பற்று, தனிப்பனை பகுதியில் இளைஞன் ஒருவன் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் வியாழக்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.
உயிரை மாய்த்துக்கொள்வதற்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.
பூ.லின்ரன்


