வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தளதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வியாழக்கிழமை (27) பிற்பகல் தளதா மாளிகைக்கு சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதன்போது, எசல பெரஹரா விழாவைக் காணவும், தளதா மாளிகைக்கு வழிபாட்டிற்காகவும் வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் சென்ற ஜனாதிபதி, அவர்களுடன் கலந்துரையாடி நலன்களையும் கேட்டறிந்தார்.
இந்த நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் ஹர்ஷ சுரங்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.




