
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவையும், பதில் செயலாளர் நாயகமாக கீர்த்தி உடவத்தவையும் நியமிப்பதற்கான தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு கொழும்பு பிரதான மாவட்ட நீதவான் சந்துன்விதான தடை உத்தரவை திங்கட்கிழமை (20) பிறப்பித்துள்ளார்.
கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட திருத்தப்பட்ட முறைப்பாட்டினை பரிசீலித்த பின்னரே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பதில் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க மற்றும் தலைவர் நிமல் சிறிபாத சில்வா ஆகியோர் கட்சி நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது எனவும் மாவட்ட நீதவான் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த இடைக்கால தடையுத்தரவு எதிர்வரும் 3ம் திகதி வரை அமலில் இருக்கும்.

