ரொசேரியன் லெம்பட்
தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பப் பயிற்சி வகுப்புக்கள், மன்னார் VMCT கலை மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (08) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
VMCT கலை மன்றத்தின் இயக்குநர் பொறியியலாளர் சூசைப்பிள்ளை விமலேஸ்வரனின் நெறிப்படுத்தலில், ஆசிரியர் மெல்சின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
கடந்த 35 ஆண்டுகளாக சிலம்பம் மற்றும் பல்வேறு பாரம்பரிய கலைகளில் நீண்ட அனுபவம் பெற்ற பிரபல ஆசான் சூசைநாதர் யசோதரன், இந்தப் பயிற்சி வகுப்புக்களை ஆரம்பித்து வைத்தார். ஞாயிற்றுக்கிழமை (08) காலை 11 மணியளவில் நடைபெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில், கலை ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
எமது பாரம்பரிய கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்குடன் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

