கரைச்சி, பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச சபைகளுக்குத் தெரிவுசெய்யப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையில் ஞாயிற்றுக்கிழமை (01) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளைத் தலைவருமான சிவஞானம் சிறீதரனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண மேனாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவரும் ஓய்வுநிலை பிரதிக்கல்விப் பணிப்பாளருமான கிருஷ்ணபிள்ளை சின்னராஜா, ஓய்வுநிலை அதிபரும் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினருமான நாகலிங்கம் சோதிநாதன் ஆகியோர் முன்னிலையில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


