• Login
Wednesday, May 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || தப்பிய விஜய் சிக்கினார் : முதலாவது பின்வாங்கல்

GenevaTimes by GenevaTimes
May 13, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || தப்பிய விஜய் சிக்கினார் : முதலாவது பின்வாங்கல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



தமிழக முதல்வர் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் நியமிக்கப்பட்ட உத்தரவை தமிழக அரசு அதிரடியாகத் திரும்பப் பெற்றுள்ளது. விஜய்யின் ஆஸ்தான ஜோதிடருக்கு ஏன் அரசுப் பதவி வழங்கப்பட்டது என விசிக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த நிலையில், இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.


முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை நியமித்து, அரசின் முதன்மைச் செயலாளர் முன்னதாக உத்தரவிட்டிருந்தார். ரிக்கி ராதன் பண்டிட், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செய்தித் தொடர்பாளராகவும், கடந்த 7 ஆண்டுகளாக விஜய்க்கு ஜோதிட ரீதியான ஆலோசனைகளை வழங்கி வருபவராகவும் அறியப்படுகிறார். இவர் முன்னதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் ஆலோசகராக இருந்துள்ளார்.


விஜய்யின் ஒவ்வொரு அரசியல் நகர்வுகளையும் ஜோதிட ரீதியாக இவரே கட்டமைத்ததாகச் சொல்லப்படும் நிலையில், நேற்று இவருக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டது. இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன.


கட்சித் தலைவர்களின் கண்டனம்:


  • பெ. சண்முகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): “அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. அரசுச் செலவில் ஒரு ஜோதிடரை அதிகாரியாக நியமிப்பது மக்கள் மத்தியில் மூடநம்பிக்கையை அதிகரிக்கவே உதவும். ‘ஜோதிடம் தனை இகழ்’ என்றார் பாரதியார். இந்த நியமனம் ஏற்புடையதல்ல,” எனத் தனது எக்ஸ் (Twitter) தளத்தில் பதிவிட்டிருந்தார்.
  • ரவிக்குமார் (விசிக): “மதச்சார்பற்ற அரசில் இது ஏற்கத்தக்கதல்ல. மாண்புமிகு முதலமைச்சர் இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,” எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
  • பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக): “உங்களுக்கு ஆஸ்தான குரு என்றால் அவரைப் தனிப்பட்ட ரீதியில் வைத்துக்கொள்ளுங்கள்; அவருக்கு அரசுப் பதவி எதற்கு?” எனக் கேள்வி எழுப்பினார்.


விஜய்யின் பதில்:


சட்டப்பேரவையில் தமிழக அரசு கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது பேசிய விசிக வன்னியரசு உள்ளிட்டோர், மூடநம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கெல்லாம் பதிலளித்து உரையாற்றிய முதல்வர் விஜய், “ராதன் பண்டிட்டின் நியமனத்தை அரசு மறுபரிசீலனை செய்யும்,” எனத் தெரிவித்தார்.


அதன்படி, தற்போது அந்தப் பணி நியமன உத்தரவு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விஜய் தலைமையிலான அரசு, ஒரு முக்கிய முடிவை அறிவித்துவிட்டு, எதிர்ப்புகளின் காரணமாக முதல்முறையாக அதனைப் பின்வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இன்று நடைப்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், 144 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பெரும்பான்மையை நிரூபித்து, தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.




Read More

Previous Post

ஜோகூரில் விரைவுப் பேருந்து விபத்து: 21 வயது பல்கலைக்கழக மாணவி உட்பட மூவர் காயம் | Makkal Osai

Next Post

PM Modi | பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனங்கள் பாதியாக குறைப்பு.. முதலமைச்சர்களின் கான்வாயும் குறைப்பு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
PM Modi | பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனங்கள் பாதியாக குறைப்பு.. முதலமைச்சர்களின் கான்வாயும் குறைப்பு! | India News (இந்தியா செய்திகள்)

PM Modi | பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனங்கள் பாதியாக குறைப்பு.. முதலமைச்சர்களின் கான்வாயும் குறைப்பு! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin