
ஜனதா விமுக்தி பெமுனவின் (JVP) பிரதான செயலாளர் டில்வின் சில்வாவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு, ஜனதா விமுக்தி பெமுனவின் பெலவத்தை தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது, சமீபகாலமாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே வளர்ச்சியடைந்த ராஜதந்திர மற்றும் கலாச்சார உறவுகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், இந்தியாவின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பிலும், இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் ஏற்பட்டுள்ள சாதகமான மாற்றங்கள் தொடர்பிலும் பேசப்பட்டது.
இந்நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் பிரிவின் முதல் செயலாளர் ரம்பாபு செல்லப்பா (Rambabu Chellappa) மற்றும் ஜேவிபியின் வெளிநாட்டு விவகாரப் பிரிவைச் சேர்ந்த கல்பனா மதுபாஷிணி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

