வீதி விபத்தில் 8 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தத் துயரச் சம்பவம் பொலனறுவை, வெலிகந்த – அசேலபுர பகுதியில் நேற்று (08) இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுவன் வீதியைக் கடக்க முற்பட்டபோது, எதிரே வந்த டிரக்டர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் டிரக்டரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (a)

