
தித்வா’ புயல் நிலைமைகள் காரணமாக இலங்கையில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வணக்கத்தலங்கள் சேதமடைந்துள்ளதாகப் பதிவாகியுள்ள நிலையில், அவற்றை மீளமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய, 758 பௌத்த விகாரைகள் 272 இந்துக் கோயில்கள் 199 பள்ளிவாசல்கள் 99 தேவாலயங்கள் சேதமடைந்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
2026.04.27 மற்றும் 2026.06.15 திகதிகளில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களின்படி, 329.62 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், புத்தசாசன நிதியம், மத்திய கலாச்சார நிதியம் மற்றும் அநகாரிக தர்மபால மன்றத்தால் 929.69 மில்லியன் ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டு, தற்போது 250 வணக்க ஸ்;தலங்களில் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சேதமடைந்துள்ள எஞ்சிய வணக்க ஸ்தலங்களில் மேலதிகமாக 144 தலங்களை, 232.07 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்புச் செய்வதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை தற்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது.

