யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் இடைநிறுத்தப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வுப் பணி நேற்று மீண்டும் ஆரம்பமானது.
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் கடந்த ஓகஸ்ட் 6ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டன.
இந்நிலையில் இடைநிறுத்தப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்று மீள ஆரம்பமாகியுள்ளன.
இதன்போது, அகழ்வாய்வுத் தளம் ஒன்றை விரிவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. (a)


