யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வின் போது புதிதாக 8 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 177 ஆக அதிகரித்துள்ளது.
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 36 ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 6 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் நேற்று முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி புதைகுழியில் இருந்து இதுவரை மொத்தமாக 164 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. (a)


