யாழ். மயிலட்டி இராணுவ முகாமில் கடமையாற்றும் சிப்பாய் ஒருவரே இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்று சுன்னாகம் நகரப் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரை வழிமறித்த குறித்த சிப்பாய், அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து உடனடியாகச் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டைத் தொடர்ந்து துரிதமாகச் செயற்பட்ட பொலிஸார், மேற்கொண்ட தேடுதல் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம் குறித்த இராணுவ சிப்பாயைக் கைது செய்ததுடன், பறிக்கப்பட்ட தங்கச் சங்கிலியையும் மீட்டுள்ளனர்.
சந்தேகநபரிடம் தற்போது மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், அவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

