• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || சீனாவின் புதிய வைரஸ் இலங்கையைப் பாதிக்குமா?

GenevaTimes by GenevaTimes
January 6, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || சீனாவின் புதிய வைரஸ் இலங்கையைப் பாதிக்குமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



சீனாவில் ஏற்பட்டுள்ள ஒரு மர்மமான வைரஸ் வெடிப்பை அடுத்து, இது COVID-19 தொற்றுநோயைப் போல உலகளவில் பாரிய வெடிப்புக்கு வழிவகுக்கும் என்று சுகாதார அதிகாரிகள் இன்னும் சந்தேகத்தில் உள்ளனர்.


சீனாவில் பரவும் வைரஸ் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது குறிப்பாக சீனாவின் வடக்கு மாகாணங்களில் 14 வயதிற்குட்பட்டவர்களிடையே பரவுவதுடன் அதன் அறிகுறிகள் பெரும்பாலும் கொவிட்-19 நோயின் அறிகுறிகளைப் போலவே இருக்கும் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


உடல்நலம் குறித்த பயத்திற்கு மத்தியில், இந்த வைரஸ் மற்ற நாடுகளை பாதிக்குமா அல்லது கொவிட்-19 நாட்களைப் போல் மீண்டும் தனிமைப்படுத்தல் மற்றும் லொக்டவுன் போன்றவற்றுக்கான தேவை வருமா என்ற ஊகங்கள் உள்ளன.


டெய்லி மிரரிடம் பேசிய சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர், இதுவரை சீனாவில் மட்டுமே இந்நோயின் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரையில் இது எச்சரிக்கைக்கான ஒரு நிலையாகவில்லை, ஆனால் இது குறித்து ஒரு நெருக்கமான கண்காணிப்பு தேவை என்றார்.


COVID-19 மற்றும் HMPV க்கு இடையில் எந்த வித்தியாசமான அறிகுறியும் இல்லை என்று அவர் மேலும் விவரித்தார். “இது வைரஸ் ஆய்வின் மூலம் மட்டுமே வேறுபடுத்தப்பட முடியும், இதற்காக குறிப்பிட்ட ஆய்வகங்கள் உள்ளன,” என்று அவர் கூறினார்.


இருப்பினும், விமான நிலையங்கள் மற்றும் பிற நுழைவுப் புள்ளிகளில் ஸ்கிரீனிங் செய்ய வேண்டிய அவசரத் தேவையை அவர் நிராகரித்தார்.


இதற்கிடையில், சீனாவில் பரவும் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (hMPV) புதியது அல்ல என்றும் கவலைப்படத் தேவையில்லை என்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவ வைரஸ் தொடர்பான நிபுணர் வைத்தியர் ஜூட் ஜெயமஹா டெய்லி மிரருக்கு தெரிவித்தார்.


உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையின்படி, வட சீனாவில் பெரும்பாலான சுவாச நோய்த்தொற்றுகள் இன்ஃப்ளூயன்ஸா ஏ மூலம் ஏற்படுகின்றன, சுவாச ஒத்திசைவு வைரஸ் (RSV), ரைனோவைரஸ் மற்றும் hMPV போன்ற பிற வைரஸ்களும் சிறிய எண்ணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வைரஸ்கள் புதியவை அல்ல மேலும் ஒரு தொற்றுநோய் போல உலகளவில் பரவ வாய்ப்பில்லை.


“2001 இல் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட hMPV, பொதுவாக இருமல், காய்ச்சல் மற்றும் தொண்டை புண் போன்ற லேசான அறிகுறிகளை ஏற்படுத்தும் ஒரு நன்கு அறியப்பட்ட வைரஸ் ஆகும். கடுமையான சந்தர்ப்பங்களில், இது மூச்சுக்குழாய் அழற்சி அல்லது நிமோனியாவுக்கு வழிவகுக்கும், குறிப்பாக இளம் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் ஏற்கனவே பாதிக்கப்படக்கூடிய சுகாதார நிலைமைகள் உள்ளவர்களைப் பாதிக்கக் கூடும்,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.



Read More

Previous Post

அடர் பனி மூட்டம்: டெல்லியில் விமான சேவை கடும் பாதிப்பு | Makkal Osai

Next Post

சட்டப்பேரவையில் திமுகவின் ஏஜெண்ட்டாக செயல்பட்டாரா ஆளுநர்? சந்தேகம் கிளப்பும் அன்புமணி!

Next Post
சட்டப்பேரவையில் திமுகவின் ஏஜெண்ட்டாக செயல்பட்டாரா ஆளுநர்? சந்தேகம் கிளப்பும் அன்புமணி!

சட்டப்பேரவையில் திமுகவின் ஏஜெண்ட்டாக செயல்பட்டாரா ஆளுநர்? சந்தேகம் கிளப்பும் அன்புமணி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin