மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் தொடர்பான புதிய அறிவிப்பை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ளது.
இதன்படி, இன்று (12) மற்றும் நாளை (13) கொழும்பு மற்றும் டுபாய்க்கு இடையிலான சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து டுபாய் நோக்கிப் பயணிக்கும் யூ.எல். 231 மற்றும் டுபாயிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் யூ.எல். 232 ஆகிய விமான சேவைகளே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த மாற்றங்களினால் பாதிக்கப்படும் பயணிகள், தங்களது விமான பயண நிலை குறித்த மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள www.srilankan.com என்ற இணையதளத்தைப் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். (a)

