வெசாக் போயா தினத்தன்று நாடு முழுவதும் உள்ள கைதிகளுக்கு திறந்த வெளி வருகைக்கான வாய்ப்பு வழங்கப்படும்.என்று சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மே 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் சிறப்பு வருகை ஏற்பாடு அமலில் இருக்கும் என்றும், மத விடுமுறையை முன்னிட்டு உறவினர்கள் கைதிகளைப் பார்க்க அனுமதிக்கப்படும் என்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெசாக் தினத்தை முன்னிட்டு, சிறையில் உள்ள உங்கள்அன்புக்குரியவர்களுக்கு உணவுப் பொதிகள், இனிப்புகள்மற்றும் தனிப்பட்ட சுகாதாரப் பொருட்களைக் கொண்டு வர குடும்பங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

