• Login
Monday, March 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || சிறுவனை கொன்று மூளையை விழுங்க முயன்ற நபர்

GenevaTimes by GenevaTimes
March 9, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || சிறுவனை கொன்று மூளையை விழுங்க முயன்ற நபர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



சகோதரியை பார்க்க சென்ற 16 வயது சிறுவனை சுத்தியலால் தலையில் தாக்கி கொன்ற நபர் அவரது இரத்தத்தை குடித்து, மூளையை சாப்பிட முயன்ற சம்பவம் அதிர வைத்துள்ளது. 


மனைவியை கொன்று சிறை சென்று சமீபத்தில் தான் வெளியே வந்த அந்த நபர் குறித்த திடுக்கிட வைக்கம் தகவல் வெளியாகியுள்ளது.


நம் நாட்டில் சமீபகாலமாக கொடூரமான பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் பெண்ணை அவரது காதலன் கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசுவது, காட்டுக்குள் வீசுவது போன்ற சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன.


இதற்கிடையே தான் தற்போது மத்திய பிரதேசத்தில் கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. உடன் பிறந்த சகோதரியை பார்த்து சகோதரத்துவ பண்டிகையை கொண்டாடபோன சிறுவனை, ஒருவர் கொன்று ரத்தம் குடித்து, மூளையை உண்ண முயன்ற அதிர்ச்சி சம்பவம் பட்டப்பகலில் நடந்துள்ளது. இதுபற்றிய திடுக்கிட வைக்கும் சம்பவத்தை இங்கு பார்க்கலாம்.


வடமாநிலங்களில் ‘ஹோலி பாய் தூஜ்’ என்ற சகோதரத்துவ பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் சகோதரிகள், தங்களின் சகோதரர்களின் நெற்றியில் திலகமிட்டு ஆரத்தி எடுப்பார். அதன்பிறகு சகோதரிகளுக்கு அவர்களின் அண்ணன், தம்பிகள் பரிசுகள் வழங்குவார்கள்.


அந்தவகையில், இந்த ஆண்டு ‘ஹோலி பாய் தூஜ்’ பண்டிகை கடந்த 5ஆம் திகதி கொண்டாடப்பட்டது. இதற்காக மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டம் சாமனா கிராமத்தில் உள்ள சகோதரியை சந்திக்க 16 வயது நிரம்பிய பரத் விஸ்வகர்மா என்ற சிறுவன் சென்று கொண்டிருந்தார்.


அப்போது பரத்துக்கு பின்னால் ஒருவர் வந்தார். அவரது பெயர் குட்டா படேல். திடீரென்று குட்டா படேல் தனது கையில் இருந்த சுத்தியலை எடுத்து பரத்தின் தலையில் அடித்துள்ளார். இதில் பரத் நிலைக்குலைந்து கீழே விழுந்தார். இருப்பினும் ஆத்திரம் அடங்காத கட்டா படேல், சிறுவன் பரத்தை விடாமல் தாக்கினார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார். தலையில் இருந்து இரத்தம் கொட்டியுள்ளது.


இந்த சமயத்தில் குட்டா படேல் அங்கிருந்து செல்லவில்லை. இறந்த சிறுவனின் தலையில் இருந்து கொட்டிய இரத்தத்தை குடித்தோடு, மூளையை எடுத்து வாயில் வைத்துள்ளார். இதற்கிடையே அங்கு வந்தவர்கள் குட்டாவின் செயலை பார்த்து அதிர்ந்து போயுள்ளனர். அவர்கள் சத்தம் எழுப்பியதால் பயந்துபோன குட்டா படேல் அருகே உள்ள தோட்டத்துக்குள் புகுந்து ஓடியுள்ளார்.


இதையடுத்து, அவரை விரட்டி சென்ற கிராம மக்கள் மடக்கி பிடித்துள்ளனர். இதற்கிடையே சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைநதுள்ளர். பொலிஸாரிடம் குட்டா படேல் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குட்டா படேல் மீது பொலிஸா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குட்டா படேல் சமீபத்தில் தான் சிறையில் இருந்து வெளியே வந்தார். மனைவியை கொன்ற வழக்கில் சிறையில் அடைக்கப்ட்டு வெளியே வந்த குட்டா படேல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தையே நடுங்க வைத்துள்ளது.


இதுபற்றி பொலிஸா கூறுகையில், “கொலை செய்யப்பட்ட சிறுவனுக்கும், கொலை செய்த நபருக்கும் இடையே எந்த முன் விரோதமும் இல்லை. சிறுவன் தனது சகோதரியின் வீட்டுக்கு சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.


சிறுவனை கொன்ற பிறகு இரத்தத்தை குடித்து மூளையை வாயில் வைத்து சாப்பிட முயன்றதாக கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றுள்ளனர்.



Read More

Previous Post

மருத்துவமனை காப்பகத்தில் குழந்தை உயிரிழந்த விவகாரம்: 2 பெண்கள் கைது

Next Post

7 மணி நேரப் பயணத்திற்குப் பின் யு-டர்ன்.. இங்கிலாந்து செல்ல வேண்டிய விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது..

Next Post
7 மணி நேரப் பயணத்திற்குப் பின் யு-டர்ன்.. இங்கிலாந்து செல்ல வேண்டிய விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது..

7 மணி நேரப் பயணத்திற்குப் பின் யு-டர்ன்.. இங்கிலாந்து செல்ல வேண்டிய விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin