சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் “கிரீன் சேனல்” ஊடாக கடத்தி செல்ல முயன்ற இரு இலங்கை பயணிகள் புதன்கிழமை(25) அன்று சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கம்பஹா பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நபராவார். இவர் துபாயில் மேற்பார்வையாளராக (Supervisor) பணிபுரிபவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மற்றவர் கண்டி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய பெண் ஆவார். இவர் துபாயில் ஆசிரியையாக பணிபுரிபவர் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டி.கே.ஜி. கபில


