நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பித்து கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மாத்தறை மொரவக்கவில் உள்ள முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்கவின் வீட்டில் பதுங்கியிருப்பதாகவும், அந்த வீடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேடுதல் விறாந்துடன், செவ்வாய்க்கிழமை (11) இரவு அங்கு சென்ற மாத்தறை சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு தேடுதல், விசாரணையை மேற்கொண்டது.