கொட்டாஞ்சேனையில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (14) இரவு இடம்பெற்றுள்ளதுடன், கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.
தனிப்பட்ட தகராறு முற்றியதால் இரண்டு நபர்களால் இக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்ய கொட்டாஞ்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R

