வாத்துவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர் வீடு திரும்பியதும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வாத்துவ பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த நான்கு கான்ஸ்டபிள்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் பாணந்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் நேற்று (12) மாலை இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நான்கு கான்ஸ்டபிள்களும் இன்று (13) பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
எனினும், ஒழுக்காற்று நடவடிக்கையை உறுதி செய்வதற்காக இந்த 4 கான்ஸ்டபிள்களையும் பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. R

