• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || காரில் பிரதமர் மோடியுடன் பேசியது என்ன? : புட்டின்

GenevaTimes by GenevaTimes
September 4, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || காரில் பிரதமர் மோடியுடன் பேசியது என்ன? : புட்டின்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




சீனாவில் நடந்த எஸ்​சிஓ மாநாட்டிலிருந்து காரில் சென்றபோது பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து ரஷ்ய ஜனாதிபதி புட்டின் பகிர்ந்துள்ளார்.


சீனா​வின் தியான்​ஜின் நகரில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) 2 நாள் உச்சி மாநாடு செப். 31 மற்றும் ஆக.1 இரண்டு நாட்கள் நடைபெற்றது.


இதில் பிரதமர் மோடி, ரஷ்ய ஜனாதிபதி புட்டின், சீன ஜனாதிபதி ஜி ஜின்பின் கலந்து கொண்ட்னர். இந்த மாநாடு நிறைவடைந்த நிலை​யில், இந்​தியா – ரஷ்யா இடையே இருதரப்பு பேச்​சு​வார்த்தை நடத்து​வதற்​காக பிரதமர் மோடி​யும் புதினும் ஒரே காரில் பயணித்து கூட்​டம் நடை​பெறும் அரங்​குக்கு சென்​றனர். இது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. காருக்குள் இருவரும் என்ன பேசினார்கள் என்ற விவாதம் நடைபெற்று வந்தது.


காரணம் பிரதமர் மோடிக்காக 15 நிமிடங்கள் காத்திருந்து ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தனது காரில் அழைத்துச் சென்றார். கூட்டம் நடைபெறும் இடத்தை அடைவதற்கான பயணம் 15 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அவர்கள் தங்கள் உரையாடலைத் தொடர காரில் கூடுதலாக 45 நிமிடங்கள் செலவிட்டனர்.


இந்த நிலையில் சீனாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காருக்குள் மோடியுடன் பேசியது என்ன என்பது குறித்த கேள்வி புட்டினிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இதில் ரகசியம் எதுவும் இல்லை. நாங்கள் அலாஸ்காவில் என்ன பேசினோம் என்பதை அவரிடம் (மோடியிடம்) கூறினேன்” என்று தெரிவித்தார்.


கடந்த ஆக.15 அன்று அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம், ஆங்​கரேஜ் நகரில் உள்ள ராணுவ தளத்​தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் – ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது அமெரிக்க – ரஷ்ய உறவு, உக்ரைன் போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.



Read More

Previous Post

இந்தோனேசியாவிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள், முதலில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள் – பெர்சத்து உறுப்பினர் கட்சியிடம் கூறுகிறார் – Malaysiakini

Next Post

‘இப்படியே சென்றால் காடுகளே இருக்காது’ – மரம் வெட்டுதலை கண்டித்து உச்ச நீதிமன்றம் கருத்து | We will be left with no forests: SC on illegally felled Himalayan trees flowing in swollen rivers

Next Post
‘இப்படியே சென்றால் காடுகளே இருக்காது’ – மரம் வெட்டுதலை கண்டித்து உச்ச நீதிமன்றம் கருத்து | We will be left with no forests: SC on illegally felled Himalayan trees flowing in swollen rivers

‘இப்படியே சென்றால் காடுகளே இருக்காது’ - மரம் வெட்டுதலை கண்டித்து உச்ச நீதிமன்றம் கருத்து | We will be left with no forests: SC on illegally felled Himalayan trees flowing in swollen rivers

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin