லொஸ் ஏஞ்சலிஸ் காட்டுத் தீயினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது தவிர 12,000 கட்டடங்கள் முற்றாக அழிவடைந்து அல்லது சேதமடைந்துள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈற்றன் மற்றும் பலிசேட்ஸ்க்ஸ் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள காட்டு தீப்பரவல் மேலும் விரிவடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்த பிரதேசங்களில் உள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் கோரியுள்ளனர். (a)


