கஹவத்த பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதோடு, ஒருவர் காயமடைந்த சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த மாதம் 30ஆம் திகதி, கஹவத்த பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இரண்டு இளைஞர்கள் கடத்தப்பட்டு அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 22 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.
மற்றொரு இளைஞன் காயமடைந்து சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதால், இது தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. R