• Login
Saturday, February 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || கரைவலை மீனவர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

GenevaTimes by GenevaTimes
February 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || கரைவலை மீனவர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட கரைவலை மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.


போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை ஜனாதிபதி அலுவலகத்திற்கு அழைத்த ஜனாதிபதி, அவர்களுடன் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டமையுடன், 2010 ஆம் ஆண்டு தொடங்கி, தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக 2013 ஆம் ஆண்டு முதல் வின்ச் இயந்திரத்தைப் பயன்படுத்தி செயல்பட்டு வரும் கரைவலை மீன்பிடித் தொழில்துறையின் தற்போதைய நிலைமை குறித்து அவர்கள் ஜனாதிபதியிடம் விளக்கினர்.


மேலும், மீனவர் பிரதிநிதிகள், தாங்கள் எதிர்கொள்ளும் நிலைமை குறித்து கவனத்தை ஈர்த்து, இந்தக் கலந்துரையாடலை வழங்கியதற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.


மீனவர் பிரதிநிதிகள் தங்கள் அனுபவங்களின் அடிப்படையில் எழுப்பிய அனைத்துப் விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்திய ஜனாதிபதி, கரைவலை மீன்பிடித் தொழில் தொடர்பாக எழுந்துள்ள இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும்போது, பொருளாதார ரீதியாக யாருடைய வாழ்க்கைத் தரத்திலும் பாதிப்பை ஏற்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை என்றும் ஒவ்வொருவரின் பொருளாதார நிலைமையையும் வலுப்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் வலியுறுத்தினார்.


மேலும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில், பொது மீனவ சமூகம் முன்வைத்துள்ள முறைப்பாடுகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், இது தொடர்பாக விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சியில் ஈடுபடுகின்ற அரச நிறுவனங்கள், கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள அறிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.


அதன்படி, மீனவர்களுக்கு ஏற்படும் பொருளாதார பாதிப்பைத் தடுப்பதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சர்வதேச இணக்கப்பாடுகளுக்கு ஏற்பவும், எதிர்கால சந்ததியினருக்காக கடற்றொழில் மற்றும் கடல் வளங்களைப் பாதுகாப்பதற்கும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி  வலியுறுத்தினார்.


அதன்படி, அனைத்து தரப்பினரும் இணைந்து குறுகிய காலத்திற்குள் கலந்துரையாடல்கள் மூலம் மிகவும் பொருத்தமான தீர்வுகளை பரிந்துரைக்க இதன்போது ஒப்புக்கொண்டதுடன், போராட்டத்தை கைவிடவும் முடிவு செய்யப்பட்டது.


அனைத்து தரப்பினரின் பங்கேற்புடன் அடுத்த திங்கள் கிழமை மேற்படி கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவும் முடிவு செய்யப்பட்டது.


கலந்துரையாடல்கள் இடம்பெறும் காலத்தில் தற்போது கரைவலை முறையின் கீழ் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் எதிர்கொள்ளும் குத்தகை போன்ற கட்டணச் சிக்கல்கள் குறித்து நிதி அமைச்சுடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் மேலும்  இணக்கம் தெரிவிக்கப்பட்டது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. (a)




Read More

Previous Post

விமானத்தில் பயங்கர கைகலப்பு: பாதியில் தரையிறங்கிய விமானம் – பயணிகளுக்கு வாழ்நாள் தடை!

Next Post

“பிகேஆர் தனது மிக வலுவான நிலையில் உள்ளது, ஆனால் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும் – அன்வார்” – Malaysiakini

Next Post

“பிகேஆர் தனது மிக வலுவான நிலையில் உள்ளது, ஆனால் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும் – அன்வார்” – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin