
சில அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து நாட்டில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு பேராயர் மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை, தெரிவித்தார்.
இலங்கையில் சமீப காலமாக உருவாகி வரும் ஆபத்தான சூழ்நிலை இது என்றும், இது நாட்டை இருளில் தள்ளும் அபாயம் உள்ளதாகவும் கூறினார்.
ருஹுணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அகுரெட்டியே நந்த தேரருக்கு மியான்மர் அரசு அக்மக பண்டிதர் என்ற கௌரவப் பட்டத்தை வழங்கும் விழா கொழும்பில் வியாழக்கிழமை (14) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

