பல கோரிக்கைகளை முன்வைத்து செவ்வாய்க்கிழமை (29) நள்ளிரவு தொடங்கவிருந்த 48 மணி நேர ரயில் ஓட்டுநர்களின் வேலைநிறுத்தம், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் செவ்வாய்க்கிழமை (29) மாலை நடைபெற்ற கலந்துரையாடலின் போது, தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதாகவும், தற்போதுள்ள நிர்வாக சிக்கல்கள் அடுத்த மாதம் 19 ஆம் திகதிக்கு முன்னர் தீர்க்கப்படும் என்றும், ஓட்டுநர்களின் பிரச்சினைகள், புதன்கிழமை (30) முதல் தீர்க்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளதால் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளோம் என லோகோமோட்டிவ் இயக்க பொறியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன வியந்துவ தெரிவித்தார்.