• Login
Friday, February 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || “ஏ.ஐ. அறிவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவோம்”

GenevaTimes by GenevaTimes
February 20, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || “ஏ.ஐ. அறிவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவோம்”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என்று டில்லியில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.


டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உச்சி மாநாடு கடந்த 16 ஆம் திகதி தொடங்கியது. 4 ஆம் நாளான நேற்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெர்ஸ், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, இலங்கை அநுரகுமார திஸாநாயக்க உட்பட 20 நாடுகளின் தலைவர்கள், 100 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்றனர்.


இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையில்,


வேளாண்மை, பாதுகாப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகள், பல்வேறு மொழிகளை அவரவர் விரும்பும் மொழியில் மொழிபெயர்க்கும் தொழில்நுட்பம் என பல்வேறு சவால்களுக்கு டில்லி ஏஐ உச்சி மாநாட்டில் மிகச் சிறந்த தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தில் உருவாக்கப்பட்ட ஏஐ தொழில்நுட்பங்கள் மற்றும் இந்தியாவின் புதுமை கண்டுபிடிப்புகள் மாநாட்டில் இடம்பெற்றுள்ளன.


அணுசக்தியை ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்தலாம். அழிவுக்கும் பயன்படுத்தலாம். அதுபோலத்தான் ஏ.ஐ. தொழில்நுட்பமும். இதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தினால் பல பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு காண முடியும். அழிவுக்கு பயன்படுத்தினால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும். மனிதகுலத்துக்கு பலன் அளிக்கும் வகையில் மட்டுமே ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். அனைவருக்கும் நன்மை, அனைவருக்கும் மகிழ்ச்சி என்ற கருத்தை முன்னிறுத்தியே இந்த மாநாடு நடத்தப்படுகிறது.


சில நாடுகள் சுயநலனுடன் செயல்படுகின்றன. ஆனால் இந்தியாவின் அணுகுமுறை வேறுபட்டது. ஏ.ஐ. மூலம் ஒட்டுமொத்த உலகமும் பயன் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் டீப் ஃபேக் காணொலி, ஒலிகள், புகைப்படங்கள் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து வருகின்றன. இதை தடுத்துநிறுத்த வேண்டும். உணவுப் பொருள் பாக்கெட்டில் என்னென்ன ஊட்டச்சத்துகள் உள்ளன என்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல டிஜிட்டல் உலகில் எது உண்மையான காணொலி, எது ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட  காணொலி என்பது தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். ஏ.ஐ. காணொலி, புகைப்படங்களை ‘வாட்டர்மார்க்’ குறியீடு மூலம் அடையாளம் காட்ட வேண்டும்.


சிறார் நலன், பாதுகாப்பு ஏ.ஐ. தொழில்நுட்ப விவகாரத்தில் சிறாரின் நலன்கள், பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும். புதிய தொழில்நுட்பத்தால் சிறாரின் நலன்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது. டில்லி மாநாட்டில் 3 இந்திய நிறுவனங்கள் தங்களது ஏ.ஐ. தொழில்நுட்ப மாதிரிகள், செயலிகளை அறிமுகம் செய்துள்ளன. இவை இந்திய இளைஞர்களின் திறமையை வெளிப்படுத்துகின்றன. உலகம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு இந்திய இளைஞர்கள் தீர்வுகளை வழங்குகின்றனர்.


சில நாடுகள் சுயநலனுடன் செயல்படுகின்றன. ஆனால் இந்தியாவின் அணுகுமுறை வேறுபட்டது. ஏ.ஐ. மூலம் ஒட்டுமொத்த உலகமும் பயன் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் டீப் ஃபேக் காணொலி, ஒலிகள், புகைப்படங்கள் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து வருகின்றன. இதை தடுத்துநிறுத்த வேண்டும். உணவுப் பொருள் பாக்கெட்டில் என்னென்ன ஊட்டச்சத்துகள் உள்ளன என்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல டிஜிட்டல் உலகில் எது உண்மையான காணொலி, எது ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட காணொலி என்பது தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். ஏஐ வீடியோ, புகைப்படங்களை ‘வோட்டர்மார்க்’ குறியீடு மூலம் அடையாளம் காட்ட வேண்டும்.


சிறார் நலன், பாதுகாப்பு ஏ.ஐ. தொழில்நுட்ப விவகாரத்தில் சிறாரின் நலன்கள், பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும். புதிய தொழில்நுட்பத்தால் சிறாரின் நலன்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது. டில்லி மாநாட்டில் 3 இந்திய நிறுவனங்கள் தங்களது ஏ.ஐ. தொழில்நுட்ப மாதிரிகள், செயலிகளை அறிமுகம் செய்துள்ளன. இவை இந்திய இளைஞர்களின் திறமையை வெளிப்படுத்துகின்றன. உலகம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு இந்திய இளைஞர்கள் தீர்வுகளை வழங்குகின்றனர் என்றார். (a)




Read More

Previous Post

“வாசனை, சுவை அறியும் திறனை இழந்தேன்” – மம்மூட்டி உருக்கம்! | Makkal Osai

Next Post

சிறுமியை கடித்துக் குதறிய தெரு நாய்கள்… காண்போரை கதிகலங்கச் செய்யும் காட்சிகள்… இதற்கு ஒரு தீர்வே கிடைக்காதா…? | India News (இந்தியா செய்திகள்)

Next Post
சிறுமியை கடித்துக் குதறிய தெரு நாய்கள்… காண்போரை கதிகலங்கச் செய்யும் காட்சிகள்… இதற்கு ஒரு தீர்வே கிடைக்காதா…? | India News (இந்தியா செய்திகள்)

சிறுமியை கடித்துக் குதறிய தெரு நாய்கள்... காண்போரை கதிகலங்கச் செய்யும் காட்சிகள்... இதற்கு ஒரு தீர்வே கிடைக்காதா...? | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin