நீர்கொழும்பு – ஏத்துகல கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் ஏத்துகல பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் ஞாயிற்றுக்கிழமை (06) மாலை காப்பாற்றப்பட்டுள்ளனர்.
வேயாங்கொடை, பூண்டுலோயா மற்றும் நமுனுகுல பிரதேசத்தில் வசிக்கும் 20, 21, 22 மற்றும் 34 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இளைஞர்கள் நால்வரும் ஏத்துகல கடலில் நீராடிக் கொண்டிருந்த போது திடீரென கடலில் மூழ்கியுள்ளனர். இதனை அவதானித்த ஏத்துகல பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் நான்கு இளைஞர்களையும் காப்பாற்றி கரைக்குக் கொண்டு சென்று அவர்களுக்கு முதலுதவி அளித்துள்ளனர்.