
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பு போன்ற ஒரு கடிதத் தலைப்பையும், எதிர்க்கட்சித் தலைவரின் கையொப்பத்துக்கு ஒப்பானதொரு கையொப்பத்தையும் பயன்படுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் இரு வெளியீடுகள் பல்வேறு சமூக ஊடக தளங்கள் மற்றும் வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக , பரப்பப்பட்டன.
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலோ அல்லது, கொழும்பு, இலக்கம் 30 சேர் மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலோ சேவை ஆற்றி வரும் எந்த அதிகாரியும் குறித்த அறிவிப்புகளை வெளியிடவில்லை.
திட்டமிட்ட அடிப்படையிலோ அல்லது அவ்வாறு இல்லாத வகையிலோ, அரச நிறுவனமொன்றின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பையோ, எதிர்க்கட்சித் தலைவரின் கையொப்பத்தையோ முறையான அனுமதியின்றி பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றை செவ்வாய்க்கிழமை (23) அன்று பதிவு செய்தது. என்று பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது,

