
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், பல்லேகலவில் நடைபெற்று வரும் ஓமானுடனான குழு பி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இலங்கை 225 ஓட்டங்களைக் குவித்தது.
பவன் ரத்னாயக்கவின் 60 (28), அணித்தலைவர் தசுன் ஷானகவின் 50 (20), குசல் மென்டிஸின் 61 (45), கமிந்து மென்டிஸின் ஆட்டமிழக்காத 19 (07) ஓட்டங்களுடனேயே 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 225 ஓட்டங்களை இலங்கை பெற்றது. பந்துவீச்சில் ஷா பைஸல் 4-0-28-0, ஜிதென் ராமனான்டி 4-0-41-2 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

