
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், மும்பையில் நடைபெற்று வரும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்தின் அணித்தலைவர் ஹரி ப்றூக், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.

